ஒரு நிரலர்(programmer) தன்னுடைய அதிக நேரத்தை செலவிடும் இடம் குறிமுறை தொகுப்பி ஆகும்.
குறிமுறை தொகுப்பியில் இரண்டு முக்கிய வகைகள் உள்ளன: ஐடிஇ(IDE)க்கள் மற்றும் இலகுரக தொகுப்பிகள். ஒவ்வொரு வகையிலும் பலர் ஒரு கருவியைப் பயன்படுத்துகிறார்கள்.
[ஐடிஇ] (https://en.wikipedia.org/wiki/Integrated_development_environment) (ஒருங்கிணைந்த மேம்பாட்டு சூழல்) என்பது "முழு திட்டப்பணியிலும்" பொதுவாக செயல்படும் பல பண்புகளைக் கொண்ட சக்திவாய்ந்த தொகுப்பியைக் குறிக்கிறது. அதன் பெயர் குறிப்பிடுவது போல, இது ஒரு தொகுப்பி மட்டுமல்ல, முழு அளவிலான "மேம்பாட்டு சூழலும்" ஆகும்.
ஐடிஇ ஒரு திட்டத்தை மின்னேற்றுகிறது (இது பல கோப்புகளை உள்ளடக்கியதாக இருக்கலாம்), கோப்புகளுக்கு இடையில் வழிசெலுத்தலை (navigation) அனுமதிக்கிறது, முழு திட்டத்தின் அடிப்படையில் (திறந்த கோப்பு மட்டுமல்ல) தன்னியக்கத்தை (autocompletion) வழங்குகிறது மற்றும் பதிப்புரு மேலாண்மை அமைப்பு(git போன்றவை), சோதனை சூழல் மற்றும் பிற "திட்ட-நிலை" தேவைகளுடன் ஒருங்கிணைக்கிறது.
நீங்கள் இன்னும் ஒரு ஐடிஇ ஐத் தேர்ந்தெடுக்கவில்லை என்றால், பின்வரும் விருப்பங்களை கவனியுங்கள்:
- விஷுவல் ஸ்டுடியோ கோட்(Visual Studio Code) (குறுக்கு-தளம்(cross-platform), இலவச வகை).
- வெப்ஸ்டோர்ம்(WebStorm) (குறுக்கு-தளம், கட்டண வகை).
விண்டோஸைப்(Windows) பொறுத்தவரை, "விஷுவல் ஸ்டுடியோ"(Visual Studio) என்பதும் உள்ளது, அதை "விஷுவல் ஸ்டுடியோ கோட்" உடன் குழப்பமடைய வேண்டாம். "விஷுவல் ஸ்டுடியோ" என்பது கட்டணம் செலுத்தவேண்டிய மற்றும் வலிமையான விண்டோஸ்-இல் மட்டுமே இயங்கக்கூடிய தொகுப்பி, இது .நெட்(.NET) இயங்குதளத்திற்கு மிகவும் பொருத்தமானது. இது ஜாவாஸ்கிரிப்ட்-டிற்கும் பொருத்தமானது. இதன் இலவச பதிப்பும் உள்ளது விஷுவல் ஸ்டுடியோ சமூகம்(Visual Studio Community).
பல ஐடிஇ-க்கள் கட்டண வகையைச் சேர்ந்தது, ஆனால் அவற்றிற்கு வெள்ளோட்ட காலம் (trial period) என்பது உள்ளது. தகுதிவாய்ந்த உருவாக்குநர் (Developer) சம்பளத்துடன் ஒப்பிடும்போது அவற்றின் கட்டணம் பொதுவாக மிகக் குறைவு, எனவே உங்களுக்கான சிறந்த ஒன்றைத் தேர்வுசெய்க.
"இலகுரக தொகுப்பிகள்" ஐடிஇ-க்களைப் போல் சக்திவாய்ந்தவை அல்ல, ஆனால் அவை வேகமான, நேர்த்தியான மற்றும் எளிமையானவை.
அவை முக்கியமாக ஒரு கோப்பை உடனடியாகத் திறக்க மற்றும் தொகுக்க பயன்படுகின்றன.
"இலகுரக தொகுப்பிகள்" மற்றும் "ஐடிஇ" ஆகியவற்றுக்கு இடையேயான முக்கிய வேறுபாடு என்னவென்றால், ஒரு ஐடிஇ ஒரு திட்ட மட்டத்தில் செயல்படுகிறது, எனவே இது தொடக்கத்தில் அதிகமான தரவை மின்னேற்றுகிறது, தேவைப்பட்டால் திட்ட கட்டமைப்பை பகுப்பாய்வு செய்கிறது மற்றும் பல. ஒரே ஒரு கோப்பு மட்டுமே தேவைப்படும் சூழலில் இலகுரக தொகுப்பிகள் மிக வேகமாக செயல்படும்.
நடைமுறையில், இலகுரக தொகுப்பிகளுக்கு அடைவு-நிலை தொடரியல் பகுப்பாய்விகள்(directory-level syntax analyzers) மற்றும் தானியங்கு நிரப்பிகள்(auto-completers) உள்ளிட்ட ஏராளமான செருகு நிரல்கள்(plugins) இருக்கின்றன, எனவே இலகுரக தொகுப்பிகள் மற்றும் ஐடிஇ-க்களுக்கு இடையே குறிப்பிடத்தக்க எல்லை என்பது இல்லை.
பின்வரும் விருப்பங்கள் உங்கள் கவனத்திற்கு தகுதியானவை:
- ஆடெம்(Atom) (குறுக்கு-தளம்(cross-platform), இலவச வகை).
- விஷுவல் ஸ்டுடியோ கோட்(Visual Studio Code) (குறுக்கு-தளம், இலவச வகை).
- சப்லைம் டெக்ஸ்ட்(Sublime Text) (குறுக்கு-தளம், பகிர் மென்பொருள்(shareware)).
- நோட்பேட்++(Notepad++) (விண்டோஸ்(Windows), இலவச வகை).
- விம்(Vim) மற்றும் எமக்ஸ்(Emacs) அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்பது உங்களுக்குத் தெரிந்தால் அவை மிகச் சரியான தேர்வாக இருக்கும்.
மேலேயுள்ள பட்டியல்களில் உள்ள தொகுப்பிகளை, நான் மற்றும் நல்ல உருவாக்குநர்களாக நான் கருதும் எனது நண்பர்கள் நீண்ட காலமாகப் பயன்படுத்தி அதனால் மகிழ்ச்சி அடைந்து கொண்டிருக்கிறோம்.
இந்த உலகத்தில் இதைவிடச் சிறந்த தொகுப்பிகளும் உள்ளன. நீங்கள் மிகவும் விரும்பும் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.
ஒரு தொகுப்பியை தேர்வு செய்வது, வேறு எந்த கருவியையும் போலவே, தனிப்பட்டது மற்றும் உங்கள் திட்டங்கள், பழக்கவழக்கங்கள் மற்றும் தனிப்பட்ட விருப்பங்களைப் பொறுத்தது.