டுடோரியலின் இந்த பகுதி ஜாவாஸ்கிரிப்ட் என்கிற நிரலாக்க மொழியின் மைய்யக் கருத்துகளை பற்றியது.
ஆனால் இந்த ஸ்கிரிப்ட்களை(அச்சுருஎழுத்து) இயக்க ஒரு செயற்பாட்டுத்தளம்(working environment) தேவைப்படுகிறது. மேலும் இந்த புத்தகம் "நேரடி இணையதளத்தில்"(online) இருப்பதால், உலாவி ஒரு சிறந்த தேர்வாகும். எனினும் உலாவிக்கு மட்டுமே பயன்படுத்தக்கூடிய கட்டளைகளின் அளவை (alert
போன்றவை) குறைந்தபட்சமாக உபயோகப்படுத்தியுள்ளோம். இதன்மூலம் நீங்கள் மற்றொரு சூழலில் (Node.js போன்றவை) கவனம் செலுத்த திட்டமிட்டால் அவற்றில் நேரத்தை செலவிட வேண்டியதில்லை. டுடோரியலின் அடுத்த பகுதி -இல் ஜாவாஸ்கிரிப்ட்-ஐ உலாவியில் பயன்படுத்துவது பற்றி கவனம் செலுத்துவோம்.
எனவே முதலில், ஒரு வலைப்பக்கத்தில் ஒரு ஸ்கிரிப்டை எவ்வாறு இணைப்பது என்று பார்ப்போம். வழங்கி-உழி(Server-side) சூழல்களுக்கு (Node.js போன்றவை), நீங்கள் "node my.js"
போன்ற கட்டளையுடன் ஸ்கிரிப்டை இயக்கலாம்.
ஜாவாஸ்கிரிப்ட் நிரல்களை ஒரு HTML ஆவணத்தின் எந்தப் பகுதியிலும் <script>
குறிச்சொல்லின் உதவியுடன் செருகலாம்.
உதாரணமாக:
<!DOCTYPE HTML>
<html>
<body>
<p>ஸ்கிரிப்டுக்கு முன்...</p>
*!*
<script>
alert( 'வணக்கம், உலகமே!' );
</script>
*/!*
<p>...ஸ்கிரிப்டுக்குப் பிறகு.</p>
</body>
</html>
மேலே உள்ள பெட்டியின் வலது மேல் மூலையில் உள்ள "இயக்கு" (Play) பொத்தானைக் கிளிக் செய்வதன் மூலம் உதாரணத்தை இயக்கலாம்.
<script>
குறிச்சொல் ஜாவாஸ்கிரிப்ட் குறியீட்டைக் கொண்டுள்ளது, இது உலாவி குறிச்சொல்லை செயலாக்கும்போது தானாகவே செயல்படுத்தப்படும்.
<script>
குறிச்சொல் சில பண்புகளை கொண்டுள்ளது, அவை இப்போதெல்லாம் அரிதாகவே பயன்படுத்தப்படுகின்றன, ஆனால் அவை இன்றும் பழைய குறியீடுகளில் காணப்படுகின்றன:
type
பண்பு: <script type=...>
: பழைய HTML தரநிலையான HTML4 க்கு ஸ்கிரிப்ட்டுடன் type
என்ற பண்பு இருக்க வேண்டும். பொதுவாக இது type ="text/javascript"
என்று குறிப்பிடப்படும். இது இனி தேவையில்லை. மேலும், நவீன HTML தரநிலை இந்த பண்புக்கூறின் பொருளை முற்றிலும் மாற்றி அமைத்துள்ளது. இப்போது, இது ஜாவாஸ்கிரிப்ட் தொகுதிகளுக்கு(Modules) பயன்படுத்தலாம். ஆனால் அது ஒரு மேம்பட்ட தலைப்பு, டுடோரியலின் மற்றொரு பகுதியில் இந்த தொகுதிகள் பற்றி பார்ப்போம்.
language
பண்பு: <script language=...>
: இந்த பண்பு ஸ்கிரிப்டின் மொழியைக் காண்பிப்பதற்காக இருந்தது. ஜாவாஸ்கிரிப்ட் இயல்புநிலை மொழியாக இருப்பதால் இந்த பண்புக்கூறு இனி தேவையில்லை. அதைப் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை.
ஸ்கிரிப்டுகளுக்கு முன்னும் பின்னும் கருத்துரைகள்.
: உண்மையில் பண்டைய புத்தகங்கள் மற்றும் வழிகாட்டிகளில், <script>
குறிச்சொற்களுக்குள் இதுபோன்ற கருத்துரைகளை நீங்கள் காணலாம்:
```html no-beautify
<script type="text/javascript"><!--
...
//--></script>
```
இந்த தந்திரம் நவீன ஜாவாஸ்கிரிப்டில் பயன்படுத்தப்படவில்லை. இந்த கருத்துரைகள் பழைய உலாவிகளில் இருந்து ஜாவாஸ்கிரிப்ட் குறியீட்டை மறைக்கின்றன, மற்றும் அவைகளுக்கு இப்படிப்பட்ட `<script>` குறிச்சொல்லை எவ்வாறு செயலாக்குவது என்று தெரிவதில்லை. கடந்த 15 ஆண்டுகளில் வெளியிடப்பட்ட உலாவிகளில் இந்த சிக்கல் இல்லை என்பதால், இந்த வகையான கருத்து உண்மையில் பழைய குறியீட்டை அடையாளம் காண உதவும்.
நம்மிடம் நிறைய ஜாவாஸ்கிரிப்ட் குறியீடுகள் இருந்தால், அதை ஒரு தனி கோப்பில் வைக்கலாம்.
ஸ்கிரிப்ட் கோப்புகள் HTML உடன் src
பண்பு கொண்டு இணைக்கப்பட்டுள்ளன:
<script src="/path/to/script.js"></script>
இங்கே, /path/to/script.js
என்பது தள மூலத்திலிருந்து ஸ்கிரிப்டுக்கு ஒரு முழுமையான பாதை ஆகும். ஒருவர் ஒரு பக்கத்தில் இருந்து, அந்த பக்கம் எந்த உறையில் உள்ளதோ அந்த உறையில் உள்ள மற்ற பக்கங்களை தொடர்புப் பாதையாகவும் குறிப்பிடலாம். உதாரணமாக, src ="script.js"
என்பது தற்போதைய கோப்புறையில் உள்ள "script.js"
என்ற கோப்பை குறிக்கும்.
அதே போன்று ஒரு முழு URL ஐயும் நம்மால் கொடுக்க முடியும். உதாரணமாக:
<script src="https://cdnjs.cloudflare.com/ajax/libs/lodash.js/3.2.0/lodash.js"></script>
பல ஸ்கிரிப்ட்களை இணைக்க, பல குறிச்சொற்களைப் பயன்படுத்தவும்:
<script src="/js/script1.js"></script>
<script src="/js/script2.js"></script>
…
ஒரு விதியாக, எளிமையான ஸ்கிரிப்ட்கள் மட்டுமே HTML இல் வைக்கப்படுகின்றன. மிகவும் சிக்கலானவை தனித்தனி கோப்புகளில் வைக்கப்படும்.
தனி கோப்பாக வைப்பதன் நன்மை என்னவென்றால், உலாவி அதை பதிவிறக்கம் செய்து அதனை [தற்காலிக சேமிப்பில்(cache)](https://en.wikipedia.org/wiki/Web_cache) சேமிக்கும்.
அதே ஸ்கிரிப்டைக் குறிப்பிடும் பிற பக்கங்கள் அதைப் பதிவிறக்குவதற்குப் பதிலாக தற்காலிக சேமிப்பிலிருந்து எடுக்கும், எனவே கோப்பு உண்மையில் ஒரு முறை மட்டுமே பதிவிறக்கப்படும்.
இது வலை போக்குவரத்தை குறைக்கிறது மற்றும் பக்கங்களை வேகமாக்குகிறது.
````warn header="If src
அமைக்கப்பட்டால், ஸ்கிரிப்ட் உள்ளடக்கம் புறக்கணிக்கப்படும்."
ஒற்றை `<script>` குறிச்சொல்லுக்குள் `src` பண்புக்கூறு மற்றும் குறியீடு(codes) இரண்டையும் கொண்டிருக்க முடியாது.
கீழே உள்ள ஸ்கிரிப்ட் இயங்காது:
<script *!*src*/!*="file.js">
alert(1); // src அமைக்கப்பட்டிருப்பதால் உள்ளடக்கம் புறக்கணிக்கப்படுகிறது
</script>
நாம் வெளிப்புற <script src ="… ">
அல்லது குறியீட்டைக் கொண்ட வழக்கமான <script>
ஐ தேர்வு செய்ய வேண்டும்.
மேலே உள்ள உதாரணம் வேலை செய்ய அவற்றை இரண்டு ஸ்கிரிப்ட்களாக பிரிக்கலாம்:
<script src="file.js"></script>
<script>
alert(1);
</script>
## சுருக்கம்
- ஒரு பக்கத்திற்கு ஜாவாஸ்கிரிப்ட் குறியீட்டைச் சேர்க்க `<script>` குறிச்சொல்லைப் பயன்படுத்தலாம்.
- `type` மற்றும்` language` பண்புக்கூறுகள் தேவையில்லை.
- வெளிப்புற கோப்பில் உள்ள ஒரு ஸ்கிரிப்டை செருக `<script src ="path/to/script.js"></script>` என்று குறியிடவேண்டும்.
உலாவி, ஸ்கிரிப்டுகள் மற்றும் வலைப்பக்கத்துடனான அவற்றின் தொடர்பு பற்றி அறியவேண்டியவை இன்னும் நிறைய இருக்கின்றது. ஆனால் டுடோரியலின் இந்த பகுதி ஜாவாஸ்கிரிப்ட் மொழிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்பதை நினைவில் கொள்வோம், எனவே உலாவி-குறிப்பிட்ட செயலாக்கங்களுடன் நாம் திசைதிருப்பக்கூடாது. ஜாவாஸ்கிரிப்டை இயக்குவதற்கான ஒரு வழியாக உலாவியைப் பயன்படுத்துவோம், இது நேரடி இணையதள வாசிப்புக்கு மிகவும் வசதியானது, அதேபோல் இது பல்வேறு முறைகளில் நமக்கு உகந்த ஒரு முறையாகும்.